Main Menu

ரஷ்யாவில் வடகொரிய இராணுவம் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாக யுக்ரேன் குற்றச்சாட்டு

ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பகுதியில் வட கொரிய இராணுவத்தினர் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளதாக யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீர் ஷெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் ஏற்பட்ட பெரும் உயிரிழப்புகள் காரணமாக ரஷ்யாவில் நிலை கொண்டிருந்த வடகொரியப் படைகள் மீளப் பெறப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், மீண்டும் போரில் பங்கெடுப்பதற்கு வட கொரிய இராணுவத்தினர் ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீர் ஷெலன்ஸ்கி, புதிய தாக்குதல்களை நடத்துவதற்கு வட கொரிய இராணுவத்தினர் அழைத்து வரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
எனினும் நூற்றுக்கணக்கான ரஷ்ய மற்றும் வடகொரிய இராணுவத்தினர் அழிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வட கொரியாவிலிருந்து அனுப்பப்பட்ட 11 ஆயிரம் படையினரில் கடந்த ஜனவரி மாதம் ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் வட கொரியாவும், ரஷ்யாவும் இந்த விடயம் தொடர்பில் இதுவரையில் எந்த பதிலும் அளிக்கவில்லை.
பகிரவும்...