யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவரின் குறும்படம் வெளியீடு
யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள், கல்லூரி ஒளிப்படக்கலைக் கழகத்தினரின் இயக்கம் மற்றும் படப்பிடிப்பில் உருவான ‘THE WAY – Target Locked’ என்ற குறும்படம் கடந்த 22ஆம் திகதி புதன்கிழமை கல்லூரி சபாலிங்கம் அரங்கில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் இ.செந்தில்மாறன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்லுரியின் பழைய மாணவரும் யாழ். பல்கலைக்கழக நுண்கலைபீடத் தலைவருமான பேராசிரியர் பா.அகிலனும் சிறப்பு விருந்தினர்களாக ஈழத்து திரைப்பட இயக்குநர் ராஜ் சிவராஜ், காணொளி புகைப்படக் கலைஞர் ஏ.கே.கமல், இசையமைப்பாளர் பூ.மதீசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் ஆசிரியர், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
சமூக பொறுப்புணர்வுச் செயற்பாட்டின் ஒரு பகுதியாக – தற்கொலைகளைத் தடுக்கும் உளவளத்துணைக்கு உதவுமுகமாக மாணவர்களை நல்வழிப்படுத்தும் இந்த குறும்படத்தை முற்றுமுழுதாக யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...