Main Menu

முன்னாள் ஜனாதிபதிகளிற்-கான பாதுகாப்பு குறைப்பு – காவல் துறை

முன்னாள் ஜனாதிபதிகளிற்கான பாதுகாப்பு குறைக்கப் பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதிகள் எதிர்நோக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து ஆராய்ந்த பின்னர் அவர்களிற்கான பாதுகாப்பில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக  காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை116லிருந்து 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது,அவரின் பாதுகாப்பிற்கு வழங்கப்பட்ட மூன்று டிபென்டர் வாகனங்களையும் அதிகாரிகள் விலக்கிக்கொண்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவிற்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 51ஆகவும் சந்திரிகா குமாரதுங்கவிற்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 58 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பகிரவும்...
0Shares