உணவு ஒவ்வாமை – சுமார் 50 ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் வைத்திய சாலையில் அனுமதி

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் சுமார் 50 ஊழியர்கள் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு இன்று (05) காலை நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
தொழிற்சாலையில் வழங்கப்பட்ட உணவை உண்டதாலேயே இந்த ஊழியர்களுக்கு மயக்கம், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் கட்டுநாயக்க பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
பகிரவும்...