2 ஆண்டுகள் சிறையில் இருந்த ரேசா பாங்கி எக்ஸ் தளத்தின் தலைமை நிதி அதிகாரியாக நியமனம்

எலான் மஸ்க் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல சமூக ஊடகமான டுவிட்டரை 44 பில்லியன் டாலர் விலைக்கு வாங்கினார். பின்னர் எலான் மஸ்க் டுவிட்டருக்கு எக்ஸ் என்ற பெயர் மாற்றம் செய்தார்.
இந்நிலையில், எக்ஸ் தளத்தின் தலைமை நிதி அதிகாரியாக துபி ஸ்ட்ரீமிங் தளத்தின் முன்னாள் நிதித் தலைவரான மஹ்மூத் ரேசா பாங்கி நியமிக்கப்பட்டுள்ளார்.
மஹ்மூத் ரேசா பாங்கி தான் எக்ஸ் தளத்தின் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்ட முதல் நபர் ஆவார். எக்ஸ் தளத்தில் லைவ் ஸ்ட்ரீமிங்கில் அதிக கவனம் செலுத்தவே பாங்கி பணியமர்த்தப்பட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது.
2010 ஆம் ஆண்டு தவறான அறிக்கைகளை வழங்கியதற்காக பாங்கி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார். பின்னர் 2021-ல் பாங்கியை அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மன்னித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...