Main Menu

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் பணிப் பகிஷ்கரிப்புகள் முடிவுக்கு வரும் – வேட்பாளர் நிபுண ஆராச்சி

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் வேலைநிறுத்தப் போராட்டங்கள் பணிபகிஸ்கரிப்புகள் முடிவிற் வரும் என தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் நிபுண ஆராச்சி தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியான பணிபகிஷ்கரிப்பு என்ற  நெருக்கடியை நாடு எதிகொண்டது என  குறிப்பிட்டுள்ள அவர் தொழிற்சங்கங்களிற்கு ஏதாவது பிரச்சினையிருந்தால் அவர்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடலாம் என தெரிவித்துள்ளார்.

அவர்கள் யாருக்கு எதிராக பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடப்போகின்றனர் அவர்களிற்கு ஏதாவது பிரச்சினையிருந்தால் அவர்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடலாம் என தெரிவித்துள்ள அவர் மாணவர்கள் பாடசாலைக்கு சென்றால் அதிபர்கள் ஆசிரியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றனர்,மருத்துவமனைக்கு சென்றால் மருத்துவர்கள் தாதிமார் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் எங்காவது சென்றால் அரசபோக்குவரத்து துறையினர் அல்லது தனியார் பேருந்துதுறையினர் வேலைநிறுத்தத்தி;ல் ஈடுபடுகின்றனர்,நவம்பர் 14ம் திகதியின் பின்னர் வேலைநிறுத்தங்களும் ஊரடங்கு உத்தரவுகளும் கடந்த காலத்தின் விடயங்களாக மாறிவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...