Day: November 1, 2024
டிசம்பர் முதல் கடவுச்சீட்டு விநியோகம் விரைவுபடுத்தப்படும்
எதிர்வரும் டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகத்தை விரைவுபடுத்த முடியும் என எதிர்ப்பார்ப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் 7 இலட்சத்திற்கும் அதிகமான வெற்று கடவுச்சீட்டுக்கள் கிடைக்கப்பெற உள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வெளிநாட்டு கடவுச்சீட்டுகளைமேலும் படிக்க...
இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல் படவில்லை: எகிப்து விளக்கம்
காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போர் வெடித்தது. காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக் கட்டும் வரை ஓய மாட்டோம் எனக் கூறியுள்ள இஸ்ரேல் தீவிர தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் மீது மட்டும் இன்றிமேலும் படிக்க...
பாகிஸ்தானில் சோகம்: பள்ளி அருகே குண்டு வெடித்து 5 குழந்தைகள் உள்பட 8 பேர் பலி
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் மஸ்தங் மாவட்டத்தில் இன்று காலை 8.35 மணிக்கு பள்ளிக்கூடம் அருகே சக்திவாய்ந்த குண்டு வெடித்துச் சிதறியது. இதில் 5 பள்ளி குழந்தைகள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 22 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுமேலும் படிக்க...
தமிழரசுக் கட்சி தே.ம. சக்தியுடன் கைகோர்க்கும்: சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சு பதவியை வழங்க இணக்கம் – உதய கம்மன்பில
இலங்கை தமிழரசுக் கட்சி பொதுத்தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தியுடன் இணையும். எம். ஏ. சுமந்திரனுக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சு பதவியை வழங்கவும், சமஷ்டியாட்சி முறைமையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் ஜனாதிபதி தமிழ் தரப்புக்கு உத்தரவாதமளித்துள்ளார். நாட்டுக்கு எதிராக இச்செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியுமா? மேலும் படிக்க...
மின்சக்தி மற்றும் வலுசக்தித் துறை மேம்பாடு டிஜிட்டல் மயமாக்கல்; இந்தியாவின் ஆதரவை எதிர்பார்க்கிறோம் – ஜனாதிபதி
இலங்கையில் மின்சக்தி மற்றும் வலுசக்தித் துறையின் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தின் வெற்றிக்கு இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்திய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்புமேலும் படிக்க...
“திராவிடம் என்ற காலாவதி தத்துவத்தைப் பேசி நமது உரிமைகளை இழந்து வருகிறோம்” – ராமதாஸ்
“நம்மிடமிருந்து நிலத்தை பெற்றுக் கொண்ட திராவிட மாநிலங்கள் எதுவுமே நமக்கு நீரைக் கூட தர மறுக்கின்றன. அதனால் தான் கூறுகிறேன், மொழிவாரி மாநிலங்களால் நாம் அடைந்ததை விட இழந்தது அதிகம். நாம் இழந்த உரிமைகள் உள்ளிட்ட அனைத்தையும் மீட்டெடுக்க இந்த நாளில்மேலும் படிக்க...
சூரசம்ஹாரம் முன்னிட்டு திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
திருச்செந்தூரில் வரும் 7ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. இந்நிலையில், சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு வரும் 6ம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார். அதன்படி, வரும் 6ம் தேதி சென்னை,மேலும் படிக்க...
குறைக்கப்பட்ட எரிபொருள் விலை போதுமானதாக இல்லை என பலர் குற்றச்சாட்டு
நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்ட எரிபொருள் விலை போதுமானதாக இல்லை என பல்வேறு தரப்பினரும் குறிப்பிடுகின்றனர். நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஒக்டைன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டு 371மேலும் படிக்க...
ரணிலின் பொருளாதார கொள்கையையே ஜனாதிபதி அநுர தொடர்கிறார் – நாமல்
ஆட்சிக்கு வந்தவுடன் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தை மறுசீரமைப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார கொள்கையை எவ்வித மாற்றமுமில்லாமல் தொடர்கிறார். ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்திய மக்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியமேலும் படிக்க...
ராஜபக்ஷாக்கள் தொடர்பில் சர்வதேச அரங்கில் விசாரணைகள் அவசியம் – கனேடிய கொன்சவேட்டிவ் கட்சித் தலைவர் பியெர் பொலிவ்ர் வலியுறுத்தல்
தமிழர்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் மீறல்களுக்கு எதிராகத் தாம் குரலெழுப்பவேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ள கனடாவின் கொன்சவேட்டிவ் கட்சித் தலைவர் பியெர் பொலிவ்ர், ராஜபக்ஷாக்கள் தொடர்பில் சர்வதேச அரங்கில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித்தேர்தல் ஊடாக புதிதாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும்மேலும் படிக்க...
போலி இலக்கத்தகடுடன் லொஹான் ரத்வத்தவின் மற்றுமொரு வாகனம் மீட்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பயன்படுத்தியதாகக் கூறப்படும் போலி இலக்கத் தகடுடன் கூடிய ஜீப் வண்டி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. தெல்தெனிய காவல்துறையினர் இதனைக் கைப்பற்றியுள்ளனர். தெல்தெனிய காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெல்தெனிய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.மேலும் படிக்க...
ஜெர்மனி கைதிக்கு மரண தண்டனை: தூதரகங்களை மூட ஈரானுக்கு உத்தரவு
ஈரான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெர்மனியைச் சேர்ந்த ஜாம்ஸித் ஷர்மாத்திற்கு திங்கிட்கிழமை ஈரான் மரண தண்டனையை நிறைவேற்றியது. இதனால் ஜெர்மனியில் உள்ள மூன்று தூதரகங்களை உடனடியாக மூடுமாறு ஈரானுக்கு ஜெர்மனி உத்தரவிட்டுள்ளது. 69 வயதாகும் ஷர்மத் அமெரிக்காவில் வசித்து வந்தார். துபாய்க்கு கடந்தமேலும் படிக்க...
சொந்த மண்ணில் ஈரானுக்கு உளவு: தம்பதியை கைது செய்தது இஸ்ரேல்
இஸ்ரேல்- காசா இடையிலான போர் காரணமாக ஈரானுக்கும்- இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் போக்கு அதிகரித்துள்ளது. ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வைத்து கொள்ளப்பட்டதற்கு பிறகு இந்த மோதல் மேலும் அதிகரித்துள்ளது. ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும விதமாகமேலும் படிக்க...
கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்த ரஷியா
உக்ரைன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்பிற்கு பதிலளிக்கும் விதமாக ரஷிய அரசு நடத்தும் ஊடக சேனல்களை யூடியூப் பிளாக் செய்தது. இதற்காக யூடியூப் சேனலுக்கு எதிராக கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்திற்குச் முன்னெப்போதும் இல்லாத அபராததத்தை ரஷியா விதித்துள்ளது. இந்த அபராதமேலும் படிக்க...
சென்னையில் 15 ஆயிரம் மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்
சென்னையில் தீபாவளி கொண்டாட்டம் உற்சாகமாக நடந்து முடிந்தது. மழை பாதிப்பு இல்லாததால் பட்டாசு, துணிமணிகள், இனிப்பு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினாலும் பட்டாசு வெடிப்பதில் கட்டுப்பாடுகள் வழங்கப்பட்டிருந்தன. காலையிலும், மாலையிலும் 2 மணிமேலும் படிக்க...
பல நூற்றாண்டுகளாக சாபத்திற்கு பயந்து தீபாவளி கொண்டாடாத கிராம மக்கள்
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நேற்று பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி விமரிசையாக தீபாவளி கொண்டாடப்பட்டது. ஆனால் இமாசல பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்ணின் சாபத்திற்கு பயந்து பல நூற்றாண்டுகளாக தீபாவளி கொண்டாடாத வினோதம் இருந்து வருகிறது. இமாசல பிரதேசத்தில்மேலும் படிக்க...
நவம்பர் 1 – இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள் இன்று
தமிழ்நாடு நாள் (Tamilnadu Day) என்பது தமிழருக்கென்று தனித் தாயகம் அல்லது மாநிலம் உருவான நாளைக் குறிப்பிடும் நாளாகும். இந்திய விடுதலைக்குப் பிறகு மொழிவழியில் மாநிலங்கள் பிரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவந்த நிலையில் அதை இந்திய ஒன்றிய அரசு ஏற்க மறுத்துமேலும் படிக்க...
தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் பணிப் பகிஷ்கரிப்புகள் முடிவுக்கு வரும் – வேட்பாளர் நிபுண ஆராச்சி
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் வேலைநிறுத்தப் போராட்டங்கள் பணிபகிஸ்கரிப்புகள் முடிவிற் வரும் என தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் நிபுண ஆராச்சி தெரிவித்துள்ளார். தொடர்ச்சியான பணிபகிஷ்கரிப்பு என்ற நெருக்கடியை நாடு எதிகொண்டது என குறிப்பிட்டுள்ள அவர் தொழிற்சங்கங்களிற்கு ஏதாவது பிரச்சினையிருந்தால்மேலும் படிக்க...
மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து விபத்து – 2 பேர் பலி
பதுளை – துன்ஹிந்த பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். சம்பவத்தில் 35 பேர் வரை காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்தே வீதியை விட்டுமேலும் படிக்க...