Main Menu

ஸ்பெயினில் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் பலர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்பெயினில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாகப் பல பகுதிகள் நீரில் மூழ்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மீட்புப் பணிகள் தொடர்வதுடன் அங்கு 3 நாட்களுக்குத் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பலர் காணாமல் போயுள்ளமையினால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

குறிப்பாக ஸ்பெயினின் வலென்சியாவில் மாத்திரம் 92 பேர் உயிரிந்ததாக வெளிநாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிரவும்...
0Shares