Main Menu

இன்று முதல் மேமாதம் வரை 68000 ரஸ்ய சுற்றுலாப் பயணிகள் இலங்கை வரவுள்ளனர்- உதயங்க

ரஸ்யாவிற்கு சொந்தமான ரெட்விங் எயர்லைன்சில் 68000 ரஸ்ய சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வரவுள்ளனர் என முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று முதல் இவர்கள் இலங்கைக்கு வரவுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

மொஸ்கோ உட்பட ஆறு ரஸ்ய நகரங்களில் இருந்து வாரத்திற்கு ஆறு விமானங்கள் இலங்கைக்கு வரவுள்ளன மே 6ம் திகதி வரை இந்த விமானங்கள் அம்பாந்தோட்டை விமானநிலையத்திற்கு வரும். 68000 சுற்றுலாப்பயணிகள் மூலம் இலங்கைக்கு 102 மில்லியன் டொலர் கிடைக்கும்.

2022 இல் நான் ரெட்விங்ஸ் மூலம் 94795 சுற்றுலாப்பயணிகளை ரஸ்யாவிலிருந்து கொண்டுவந்தேன்,மத்தல விமானநிலையம் ஊடாக இலங்கை வந்த இவர்கள் மூலம் 150 மில்லியன் டொலர் வருமானம் கிடைத்தது.

நான் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டுள்ளேன்,9 வருடகால அரசியல் பழிவாங்கலை முடிவிற்கு கொண்டுவரவேண்டிய நேரமிது என அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...
0Shares