Main Menu

ஓய்வூதிய தாரர்களுக்கான 3,000 ரூபாய் மாதாந்த இடைக்கால கொடுப்பனவு இன்று முதல்

அனைத்து ஓய்வூதியதாரர்களின் கணக்குகளிலும் இன்று (16) 3,000 ரூபாய் மாதாந்த இடைக்கால கொடுப்பனவு வைப்பு செய்யப்படவுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் ஓய்வூதியம் பெறுவோர் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் தபால் நிலையங்கள் மற்றும் உப அலுவலகங்கள் மூலம் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் இன்று (16) முதல் 3,000 ரூபா மாதாந்த இடைக்கால கொடுப்பனவை வழங்க ஓய்வூதிய திணைக்களம் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது.
பகிரவும்...