பொருளாதார நெருக்கடியால் மீள்வதற்கு இந்தியா உதவுமென மாலைதீவு நம்பிக்கை
மாலைத்தீவு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இந்தியா உதவுமென தாம் நம்புவதாக மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள மொஹமட் முய்ஸு, நூறு மில்லியன் ரூபாய் அமெரிக்க டொலர் மதிப்பிலான பிணை எடுப்பை இந்தியாவிடமிருந்து பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாலைத்தீவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 440 மில்லியன் அமெரிக்க டொலராக குறைந்துள்ளது.
குறித்த நிதியானது ஒன்றரை மாதத்திற்கான இறக்குமதிக்கு மாத்திரம் போதுமானதாக இருக்குமெனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன
பகிரவும்...
