தமிழ் தேசியம் பேசும் தமிழ் தலைவர்களிடம் மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் – எம்.ஏ. சுமந்திரன்
தமிழ் தேசியம் என கூறி பல தமிழ் தலைவர்கள் மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழ்ப்பாணத்தில் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் வைத்து அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில், வட மாகாண முன்னாள் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். வாக்களிக்கின்ற விடயத்தில் தமிழ் மக்கள் சிந்தித்துச் செயற்படுவார்கள் என தமக்குத் தெரியும் எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பகிரவும்...