ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் -சர்வதேச நீதிமன்றம் உத்தரவு
காசாவின் ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தவேண்டும் என சர்வேதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேல் உடனடியாக ரபா மீதான தாக்குதலையும் ஏனைய நடவடிக்கைகளையும் நிறுத்தவேண்டும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மனிதாபிமான பொருட்களை காசாவிற்குள் கொண்டு செல்வதற்காக இஸ்ரேல் எகிப்து எல்லையில் உள்ள ரபா எல்லையைதிறக்கவேண்டும் விசாரணையாளர்களும் காசாவில் என்ன நடக்கின்றது என்பதை அறிவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களும் காசாவிற்குள் செல்வதற்கு அனுமதிக்கவேண்டும் எனவும் சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச நீதிமன்றம் தனது உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஒரு மாதகாலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும்எனவும் உத்தரவிட்டுள்ளது.
பகிரவும்...