Main Menu

ரெலோவின் 11வது தேசிய மாநாடு ஆரம்பம்!

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) 11வது தேசிய மாநாடு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (24) காலை 10 மணிக்கு ஆரம்பமானது.

கட்சியின் கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாயின.

விடுதலை போராட்டத்துக்காக உயிர் நீத்த அனைத்து பொது மக்களுக்கும், போராளிகளுக்குமாக ஒரு நிமிட அக வணக்கமும் செலுத்தப்பட்டது. 

இந்த நிகழ்வில் கட்சியின் மாநாட்டுப் பிரகடனம் வாசிக்கப்பட்டதுடன், சிறப்புரைகளும் நிகழ்த்தப்பட்டன.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், கோவிந்தம் கருணாகரம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், செயலாளர் சிவசக்தி ஆனந்தன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள், இளைஞர்கள் என பலர் கலந்துகொண்டனர்.