Main Menu

மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி!

மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சினிமா படப்பிடிப்பு ஒன்றில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை கலந்து கொண்டிருந்த நிலையிலேயே மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, நேற்றைய தினம் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.