Main Menu

பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரங்களைக் கொண்ட நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு உண்டு – அரசாங்கம்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரங்களைக் கொண்ட பெரும்பான்மையான உறுப்பு நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்தார்.

குறித்த தீர்மானத்தை அமுல்படுத்த அதிகாரம் இல்லை, ஆனால் தனிப்பட்ட நாடுகள் தொடர்பான முடிவுகளை மட்டுமே எடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

அதன்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தை ஐ.நா.பாதுகாப்பு சபையில் சமர்ப்பிக்கலாம் இருப்பினும் அத்தகைய நடவடிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை நாடாது என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

அவ்வாறு சமர்ப்பித்தால் ஐ.நா.பாதுகாப்பு சபை இலங்கை குறித்து நடவடிக்கை எடுக்கலாம் என்றாலும் பாதுகாப்பு சபையில் உள்ள உறுப்பு நாடுகளின் பெரும்பான்மை ஆதரவு தமக்கு இருப்பதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டினார்.

ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்ட ஏ / எச்.ஆர்.சி / 46 / எல் 1 தீர்மானதிற்கு ஆதரவாக 22 வாக்குகள், அதற்கு எதிராக 11 வாக்குகள் மற்றும் 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...