ஐ.நா. விவகாரத்தில் இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை விடயத்தை இலங்கை அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பின திஸ்ஸ அத்தநாயக்க, அமர்வின் முடிவில் இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால் பொதுமக்கள் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என கூறினார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை இராணுவமயமாக்கல் போன்ற விடயங்களை எடுத்துக்காட்டுகிறது என குறிப்பிட்ட அவர் இலங்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குறித்த தீர்மானம் பாராட்டத்தக்கதல்ல என்றும் கூறினார்.
எனவே இராணுவமயமாக்கல் குறித்தும் அவர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை மீறுவதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிக்கக்கூடாது என்றும், இது மோதல்களுக்கு வழிவகுக்கும் என்றும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.
பகிரவும்...