Main Menu

இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை விரிவாக்கும் வழிகள் குறித்து அவுஸ்ரேலியா – இலங்கை பேச்சு

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து இலங்கை மற்றும் அவுஸ்ரேலியாவிற்கு இடையில் இன்று பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ள அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் மொரைஸ் பெய்ன், மீண்டும் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு  அமைச்சருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இரு வெளிவிவகார அமைச்சர்களும் பன்முக தன்மையை ஊக்குவிப்பதற்கும் விரிவுபடுத்துவதற்குமான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து விவாதித்தனர் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு டுவீட் செய்துள்ளது.