Main Menu

யூரோ மண்டலத்தின் தலைவர் பதவிக்கு பொருளாதார அமைச்சரை நியமிக்க ஸ்பெயின் விருப்பம்!

யூரோ மண்டலத்தின் தலைவர் பதவியை பொருளாதார அமைச்சர் நதியா கால்வினோ (Nadia Calvino) ஏற்க ஸ்பெயினின் அரசாங்கம் பரப்புரை செய்யத் தொடங்கியுள்ளது.

அத்துடன், பொருளாதார அமைச்சர் கால்வினோ யூரோ மண்டலத்தின் தலைவரானால் ‘நல்ல செய்தி’ என்று ஸ்பெயின் கூறுகிறது.

போர்த்துகீசிய நிதியமைச்சர் மரியோ சென்டெனோ செவ்வாயன்று யூரோ மண்டல தலைவராக இரண்டாவது முறையாக, 2.5 ஆண்டு கால அவகாசத்தை பெறப்போவதில்லை என கூறியிருந்தார்.

இந்த பின்னணியில், ஏற்கனவே நீண்ட காலமாக இந்த தலைமை பதவியில் ஆர்வம் கொண்டிருந்த ஸ்பெயின், நதியா கால்வினோவை தலைவராக கொண்டுவர விருப்பம் தெரிவித்துள்ளது.

மிக முக்கியமாக, பிரஸ்ஸல்ஸில் உள்ள அதிகாரிகளுக்கு கால்வினோ பிடித்தவர்களில் ஒருவராகவும் இருப்பதால், அவர் தலைவராவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இத்தாலி உள்ளிட்ட 19 நாடுகள் அங்கம் வகிக்கும் யூரோ மண்டல நிதி அமைச்சர்களின் புதிய தலைவர், எதிர்வரும் ஜூலை 9ஆம் திகதி தேர்வு செய்யப்படவுள்ளார்.

கால்வினோ, 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பொருளாதார அமைச்சராக இருந்து வருகிறார். ஜனாதிபதி பெட்ரொ சான்செஸ் தலைமையிலான அமைச்சரவையில் துணை பிரதமராகவும் உள்ளார்.

சக்திவாய்ந்த யூரோப்பகுதி பொருளாதார அமைப்பின் தலைவராக கால்வினோ, நியமிக்கப்பட்டால், அவரே யூரோ மண்டலத்தை வழிநடத்திய முதல் பெண்மணி என்ற பெருமையை பெறுவார்.

பகிரவும்...