எரிவாயு விலை மாற்றம்
டிசம்பர் 1 ஆம் திகதியில் இருந்து எரிவாயுவாக்கான விலையில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. நான்கு மில்லியன் பயனாளர்கள் விலைமாற்றத்தைச் சந்திக்க உள்ளனர். டிசம்பர் 1 முதல் எரிவாயுவுக்கான கட்டணம் 0.6% இனால் அதிகரிக்கப்பட உள்ளது. இத்தகவலை நேற்று புதன்கிழமை Commission de régulation de l’énergie (CRE) (எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையம்) வெளியிட்டுள்ளது. சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயுவில் 0.1 வீதமும், சமையல் மற்றும் வெந்நீருக்கு பயன்படுத்தப்படும் எரிவாயுக்கு 0.3 வீதமும், சமையல், வெந்நீர் மற்றும் வெப்பமாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் எரிவாயுவுக்கு 0.6 வீதமும் அதிகரிக்கப்பட உள்ளது.
பகிரவும்...