Main Menu

அயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய இஸ்லாமிய அமைப்புகள் திட்டம்?

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுவொன்றை தாக்கல் செய்யலாமா என்பது குறித்து இஸ்லாமிய அமைப்புகள் ஆலோசனை நடத்திவருதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த அமைப்புகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) லக்னோவில் கூடி ஆலோசித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த ஆலோசனையின் இறுதி முடிவு பிற்பகல் 3 மணியளவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரணை செய்து தீர்ப்பு வழங்கியிருந்தது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்றும், இஸ்லாமியர்களுக்கு மாற்று நிலமொன்றை வழங்குவதாகவும் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...