Main Menu

முள்ளிவாய்க்காலில் ஆயுதப்போர் மட்டும் மௌனிக்கவில்லை தமிழரின் மானம் ரோசம் உணர்வு எல்லாமே மௌனத்துவிட்டது

முள்ளிவாய்க்காலில் கடந்த 2009,மே,18,ல் ஆயுப்போர் மட்டும் மௌனிக்கவில்லை எமது மானம் மரியாதை வெட்கம் ரோசம் ஒழுக்கம் தியாக உணர்வு உரிமை எல்லாமே மௌனித்து விட்டது இந்த உண்மை மனச்சாட்சி உள்ள தமிழினம் புரிந்துகொண்டு உறுதியுடன் வாழ வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்.

அம்பிளாந்துறை ஞானசக்தி முத்துமாரியம்மன் ஆலய திருச்சடங்கு நிகழ்வை ஒட்டி அம்பிளாந்துறை கலைமகள் மகாவித்தியாலய மற்றும் அம்பிளாந்துறை கனிஷ்ட வித்தியாலய மாணவர்களால் இடம்பெற்ற முத்தமிழ் கலை நிகழ்வு இரு வித்தியாலய அதிபர்களான சு.தேவராஜன், க.அரசரெட்டணம் இருவரின் இணைத்தலைமைகளில் இடம்பெற்றது.

அந்த விழாவில் சிறப்பு சொற்பொழிவு ஆற்றிய பா.அரியநேத்திரன் மேலும் உரையாற்றுகையில்,
தமிழரின் கலை பண்பாடு என்பது தமிழ் மொழியுடனும் தமிழ் இனத்துடனும் இரண்டற கலந்த ஒன்றாகும் ஆலயங்கள் ஊடாக பக்தி ஒழுக்கம் பண்பாடு வளர்க்கப்படுகிறது தமிழரின் பூர்வீக வரலாற்று சின்னங்களாக இந்துமத கோயில்களும் அடையாளப்படுத்தப்படுகிறது கடந்த போர்காலத்தில் கூட எமது உரிமைகள் மறுக்கப்பட்டபோதும் அதற்கான ஆயுதப்போராட்டம் இடம்பெற்ற காலத்தில் வடக்கு கிழக்கு தாயகத்தில் கல்வியும் ஒழுக்கமும் பண்பாடும் மானமும் உரோசமும் எப்போதும் எம்முடன் உறுதியாய் இருந்தது.

இன்று திருமலை கண்ணியா வென்னீர் ஊற்றும் பூர்வீக தமிழர் பாரம்பரிய நிலங்களும் மாற்று இனங்களால் அபகரிக்கப்படுகின்றன.

போராட்ட காலத்தில் தமிழ்மக்களின் பேரம்பேசும் சக்தி மேலோங்கி காணப்பட்டது தமிழர்களின் பலம் உலக அரங்கில் ஓங்கி ஒலித்தது இதைத்தான் கடந்த யூண் மாதம் 30,ம் திகதி யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற இலங்கை தமிழரசு கட்சி பேராளர் மாநாட்டில் உரையாற்றிய தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் ஐயா தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.

ஆயதப்போராட்டம் இங்கு இடம்பெற்ற போது இலங்கை நாட்டு அரச தலைவர்களுக்கு வடகிழக்கு தமிழ்பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு வழங்க வேண்டும் என்ற சிந்தனை இருந்தது ஆனால் முள்ளிவாயக்கால் மௌனத்திற்குப்பின் அந்த எண்ணம் இலங்கை அரச தலைவர்களிடம் இல்லை அதாவது பேரம் பேசும் சக்தி தமிழர்களிடம் இல்லை என்பதையே அவர் மறைமுகமாக அங்கு சுட்டிக்காட்டினார்.

ஆனால் சம்மந்தர் ஐயாவின் கருத்து அங்கு திரிவு படும்படியாக ஆயுதப்போராட்டம் நடந்த சம்மந்தன் ஐயா தயார் என கூறியது போன்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன உண்மையில் சம்பந்தர் ஐயாவின் கருத்து பேரம் பேசும் சக்கி ஆயுதப்போர் காலத்தில் 2009,மே,18,வரை இருந்தது என்பதையே வலியுறுத்தி இருந்தார்.

கடந்த ஏப்ரல் 21,இலங்கையில் கொழும்பு மட்டக்களப்பில் இடம்பெற்ற இஷ்லாமிய பயங்கரவாத மிலேச்சத்தனமான தற்கொலை தாக்குதல் இடம்பெற்ற பின்புதான் இலங்கை அரசின் சிங்கள தலைவர்களுக்கும் பௌத்த துறவிகளுக்கும் ஏனய இஷ்லாமிய சிங்கள அரசியல் தலைவர்களுக்கும் விடுதலைப்புலிகள் யார் அதன் தலைவர் எப்படியானவர் அவர்களின் விடுதலைப்போராட்ட தியாகங்கள் அவர்களின் நடத்தைகள் ஒழுக்க விழுமியங்கள் பற்றி வெளிப்படையாக புகழாரம் சூட்டுவதை காணமுடிந்தது உண்மைகள் எப்போதும் மௌனிக்காது உறங்காது என்பதை மீண்டும் பத்து வருடம் கழித்து சிங்கள தலைவர்கள் வாயால் சொல்ல வைத்துள்ளது.

இதுதான் எமது போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி துரோகிகளும் எதிரிகளும் தலைவர் பிரபாகரனின் உன்னத இலட்சியத்தை உச்சரிக்க வைத்துள்ளது அல்லவா?
சர்வதேச தலைவர்களும் மீண்டும் ஞாபகப்படுத்தும் அளவில் எமது உரிமைப்போராட்டம் விழிப்பு பெற்றுள்ளது அல்வா?
தற்போது இன்னும் ஒன்றை நாம் இங்கு நகாண்கிறோம் குறிப்பாக கிழக்கு மகாணத்தில் தமிழர்களின் ஜனநாயக பலத்தை சிதைக்கும் வித்த்தில் மழைக்கு காளான்கள் முளைப்பதை போன்று அரசியல் கட்சிகள் முளைக்கின்றன,பலர் தேரோட்ட திருவிழாவில் கடை திறப்பதை போன்று கட்சி கடைகள் திறக்கின்றனர் யார் கட்சியை ஆரம்பித்தாலும் அவர்கள் தமிழ்தேசிய அரசியல் தலைவர்களால் சூட்டப்பட்ட பெயர்களையே தமது கட்சிகளுக்கு பெயராக வைக்கின்றனர்.

விடுதலைப்புலிகள் என்ற பெயரையும், அவர்கள் பயன்படுத்திய மஞ்சள் சிவப்பு நிறத்தையும் தான் கிழக்கில் ஒருகட்சி தமிழமக்கள் விடுதலைப்புலிகள் கொப்பி அடித்து அரசியல் செய்கின்றனர்.
அதுபோலவே கூட்டமைப்பு,கூட்டணி என்ற பெயர்களையும் கிழக்கு தமிழர் ஒன்றியம், கிழக்கு தமிழர் கூட்டணி என தமது கட்சிகளுக்கு பெயர் சூட்டி தமிழ்தேசிய கூட்டமைப்பை விமர்சனம் செய்கின்றனர்.

இதில் இருந்து ஒரு உண்மை புலப்படுகிறது தமிழ்தேசிய அரசியலில் புலிகளை தவிர்த்து கூட்டமைப்பை தவிர்த்து யாரும் அரசியல் செய்ய முடியாது என்ற உண்மை புலப்படுகிறது அதன் உள்ள உறுதியை தாமும் ஏற்றால்தான் தமது கட்சியை விளம்பரம்பரப்படுத்தலாம் என்பதை மாற்று கருத்து கூறி பிரதேசவாத அரசியல் செய்யும் பலரும் புரிந்துள்ளனர்.
அவர்கள் எவருமே தமது கட்சியின் கொடியில்கூட மஞ்சள் சிவப்பை தவிர்க்க முடியாமல் கொப்பி அடித்து அரசியல் செய்வது நீண்ட காலத்திற்கு எடுபடாது என்பதை புரியவேண்டும்.

தற்போது முள்ளிவாய்க்கால் மௌனத்திற்குப்பின் வடக்கு கிழக்கு இளைஞர்கள் இடையே நல் ஒழுக்கம் போதைவஷ்து பாவனைகள் வாள்வெட்டு கும்பல்கள் முதியோரை கனம்பண்ணாமை குருவை தெய்வமாக மதியாத மனப்பாங்கு கொலை தற்கொலை முயற்ச்சி என்பனவும், மேற்கத்திய கலாசாரங்களும் எம்மிடையே அதிகரிக்கப்பட்டுள்ளது.

எமது பாரம்பரிய கலைகளை வளர்க்கும் தளமாக கல்வியுடன் பாடசாலைகள் இவ்வாறான கலை நிகழ்வுகளை நடத்துவதை நாம் பாராட்ட வேண்டும்.எனவும் மேலும் கூறினார்.