Main Menu

எய்தவன் இருக்க அம்மை நோகும் காலம்

வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்களை கடந்த 2018 நவம்பர் 29 படுகொலை செய்தவர்களும் முஸ்லிம் பயங்கரவாதிகள்தான் என்பது இன்று்்் 2019 ஏப்ரல் 27,ல் கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால்..!

என்னை இரண்டுதடவை 2018,டிசம்பர் 22, மற்றும் 2019,மார்ச்,18, ஆகிய தினங்களில் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் அழைத்து வவுணதீவு பொலிசார் கொலைசெய்யப்பட்டமை சம்மந்தமாக விசாரணை மேற்கொண்டனர்

2018, நவம்பர் 27, மாவீரர் தினத்தில் தாண்டியடி,மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்திற்கு எனது வாகனத்தில் யார் யார் சென்றீர்கள் என்பது தொடர்பாகவும் வவுணதீவு பொலிசார் இருவரும் கொலை தொடர்பாகவே விசாரிப்பதாகவும் கூறினர்.

எனது வாகனத்தில் எவருமே அன்றய தினம் வரவில்லை நான் மட்டுமே சென்றேன் என்பதை கூறினேன்.

வவுணதீவு பொலிசார் கொலை செய்யப்பட்டதற்கும் எனக்கும் எந்த சந்தர்ப்பமும் இல்லாத நிலையில் ஏன் அதுசம்மந்தமான விசாரணை என்மீது என கேட்டபோது மாவீரர் தினத்தில் புகைப்படம் எடுத்த மூன்று இளைஞர்களும் எனது வாகனத்தில் வந்ததாக சிலர் கூறியதன் காரணமாக விசாரிப்பதாக தெரிவித்தனர்.
உண்மைக்கு புறம்பான தகவல் என்பதை நான் கூறினேன்.

வவுணதீவு பொலிசார் இருவர் கொலை செய்யப்பட்டு சரியாக ஐந்து மாதம் கடந்துதான் இன்று (27/04/2019) அந்த கொலைக்கான சூத்திரதாரி கண்டு கொள்ளப்பட்டுள்ளது.
அதுவும்..!
முஷ்லிம் பயங்கர வாத அமைப்பு கடந்த 21/04/2019, தற்கொலை தாக்குதல் நடத்தியபின்னரான விசாரணையே வவுணதீவு பொலிசாரின் கொலை உண்மை வெளிவந்துள்ளது.
என்னைப்போல் இன்னும் எத்தனை பேர் வவுணதீவு பொலிசார் கொலை சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்பட்டிருப்பார்கள் எத்தனைபேர் தடுத்துவைக்கப்பட்டிருப்பார்கள். முன்னாள்போராளிகள் எத்தனைபேர் விசாரிக்கப்பட்டனர். இன்னும் சிலர் தடுத்துவைக்கப்பட்டும் உள்ளனர்.
உண்மைகளை கண்டறியப்பட வேண்டும் அதற்காக எந்த குற்றமும் செய்யாதவர்களும் சந்தேகத்தில் நோக்குவது உண்மையான குற்றவாளிகள் தப்பிப்பதற்கும் வாய்ப்புள்ளது அல்லவா?
(பா.அரியநேத்திரன்)

பகிரவும்...