Main Menu

81வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. யோகேஸ்வரி குணராஜா (08/05/2023)

தாயகத்தில் பூநகரியை சேர்ந்த பிரான்ஸ் Créteil இல் வசிக்கும் திருமதி. குணராஜா யோகேஸ்வரி அவர்கள் 07ம் திகதி மே மாதம் ஞாயிற்றுக்கிழமை அன்று வந்த தனது 81வது பிறந்தநாளை 08ம் திகதி மே மாதம் திங்கட்கிழமை இன்று தனது இல்லத்தில் மிகவும் அமைதியாக கொண்டாடுகின்றார்.

இன்று 81 வது பிறந்தநாளை கொண்டாடும் திருமதி குணராஜா யோகேஸ்வரி அம்மாவை அன்பு கணவர் குணராஜா, அன்பு பிள்ளைகள் சுதா, விஜி, கண்ணன், மருமக்கள் அப்பன்ராஜ், துளசிதாஸ், லீசி, சகோதரர்கள் அற்புதமலர் (Canada), நேருதாஸன் (தாயகம்) பாரதிதாஸன் (தாயகம்) ஸ்ரீகாந்தன் (Italy) கமலதேவி (தாயகம்) பெறாமக்கள், மருமக்கள், மச்சாள்மார், மச்சான்மார், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்துடன் வளமாக, நலமாக, பலமாக சந்தோசமாக டென்மார்க் அபிராமி உபாசகித் தாயின் அருளோடு வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் திருமதி குணராஜா யோகேஸ்வரியம்மா அவர்களை TRT தமிழ் ஒலி குடும்பமும், அன்பு நேயர்களும் இன்று போல் என்றும் தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பிள்ளைகள் சுதா, விஜி, கண்ணன்.

அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

பிள்ளைகளின் அன்பைக் கோர்த்து
அன்னைக்கு அன்பு வாழ்த்து!
உள்ளங்களின் மாண்பைக் கோர்த்து
மனம் மகிழ்ந்து வாழ்த்தும் வாழ்த்து
!

தாயவளின் பண்பைச் சேர்த்து
மாயவனின் அருளை கோர்த்து
மகிழ்ச்சியுறும் நாளைப் பார்த்து
புகழ்ச்சியுடன் வாழ்த்தும் வாழ்த்து
!

எண்பத்தோர் அகவை தன்னில்
வாழ்ந்திடும் புனித மண்ணில்
வாழ்வாங்கு வாழ்ந்திருக்க
வையகத்தில் மகிழ்ந்திருக்க

புனித மனம் கொண்ட அன்னைக்கு
புகழ் சேர்க்கும் பிள்ளைகளின்
பிறந்த நாள் நல் வாழ்த்து!

பகிரவும்...