Main Menu

70 ஆண்டு கால ஆட்சியின் பின் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலம் ஆகினார்

பிரித்தானியாவின்  நீண்டகால மஹாராணியாக விழங்கிய இரண்டாம் எலிசபெத் மகாராணி, 70 ஆண்டு கால ஆட்சி யின் பின்னர், 96 வயதில் பால்மோரலில் காலமானார்.

இன்று(08)  அவரது உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து அவரது குடும்பத்தினர் அவரது ஸ்கொட்டிஷ் மாளிகையில் ஒன்று கூடினர்.

இதுகுறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று பிற்பகல் பால்மோரலில் ராணி நின்மதியாக இயற்கை எய்தினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1952 இல் அரியணைக்கு வந்த மஹாராணி  மகத்தானபிரித்தானியாவை உருவாக்கியவராக  சமூக மாற்றத்தைக் கண்டவராக போற்றப்படுகிறார்.

அவரது மரணத்துடன், முன்னாள் வேல்ஸ் இளவரசரும் அவரது மூத்த மகனுமான  சார்லஸ், புதிய அரசராகவும், 14 காமன்வெல்த் நாடுகளுக்குத் தலைவராகவும் நாட்டை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...