Main Menu

7வது முறையாக ஜனாதிபதியான யோவேரி முசவேனி

உகாண்டா ஜனாதிபதி தேர்தலில் 81 வயதான யோவேரி முசவேனி ஏழாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 40 ஆண்டுகளாக அந்நாட்டை ஆட்சி செய்து வரும் அவர், இந்தத் தேர்தலில் 71 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இந்தத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி வேட்பாளரான பாபி வைன் எனப்படும் கியகுலானி சென்டாமு 24 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

National Unity Platform தலைவரான பாபி வைன், இராணுவம் மற்றும் பொலிஸார் தனது வீட்டை முற்றுகையிட்ட போதிலும், தான் அங்கிருந்து தப்பித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்தத் தேர்தல் முடிவுகள் போலியானவை எனத் தெரிவித்து அவற்றை நிராகரித்துள்ள அவர், அவற்றை அலட்சியப்படுத்துமாறு தனது ஆதரவாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.