3 வது முறை பிரதமராகும் மோடி.. பாராட்டி பேசிய நடிகர் ரஜினி
லோக்சபா தேர்தல் ரிசல்ட் வந்துள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்க உள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த வேளையில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வென்ற ஸ்டாலின் பற்றி அவர் கூறிய வார்த்தை அதிக கவனம் பெற்றுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் ஒவ்வொரு ஆண்டும் இமயமலைக்கு சென்று வருகிறார். அந்த வகையில் அவர் சமீபத்தில் இமயமலைக்கு சென்றார். உத்தரகாண்ட் மாநிலத்தில் ரிஷிகேஷ், பத்ரிநாத் பாபா ஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் விசிட் செய்தார்.
இமயமலை பயணத்தை முடித்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் சென்னை திரும்பினார். விமானத்தில் சென்னை வந்திறங்கிய நடிகர் ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் லோக்சபா தேர்தல் முடிவுகள் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது.
அப்போது நடிகர் ரஜினிகாந்த் 3 முக்கிய தலைவர்களின் வெற்றிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:
பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியடைந்த திமுக கூட்டணி தலைவர் என்னுடைய அருமை நண்பர் முதல் அமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்து கொள்கிறேன். அப்படியே என்னுடைய நண்பர் சந்திரபாபுநாயுடு ஆந்திர பிரதேசத்தில் பெரிய வெற்றியடைந்துள்ளார். அவருக்கும் வாழ்த்துகள். பாராட்டுகள்.
மத்தியில் என்டிஏ 3வது முறையாக ஆட்சி அமைக்க போகிறது. 3வது முறையாக மோடி பதவியேற்க உள்ளார். அவருக்கு ம் என்னுடைய பாராட்டுகள்” என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
பகிரவும்...