Day: July 7, 2026
சட்ஜிபிடியில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு : AI படம் உருவாக்கும் சேவையில் சிக்கல் – பயனர்கள் முறைப்பாடு

இந்தியாவில் சட்ஜிபிடி (ChatGPT) செயலியின் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் படங்களை உருவாக்கும் சேவையில் திடீரெனத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகப் பயனர்கள் தரப்பில் முறைப்பாடுகள் எழுந்துள்ளன. சேவை முடக்கங்களைக் கண்காணிக்கும் இணையத்தளமான Downdetector-இல் இது தொடர்பாக 100-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன.மேலும் படிக்க...
எகிப்தை 3-2 என வீழ்த்தி அர்ஜென்டினா காலிறுதிக்குத் தகுதி

2026 பீபா (FIFA) உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் சுற்று 16இல் இடம்பெற்ற விறுவிறுப்பான போட்டியில், எகிப்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. போட்டியின் 15ஆவது நிமிடத்தில் யாசர் இப்ராஹிம் எகிப்துமேலும் படிக்க...
கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடமை! ஐ.நா வலியுறுத்தல்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவம் குறித்து, இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-எண்ட்ரே பிராஞ்ச் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை விடுத்துள்ள அறிக்கையில், இந்தத் துயரச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தனது இரங்கலைத் தெரிவித்துக்மேலும் படிக்க...
மட்டு சிறையில் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதி

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தனது கழுத்தை பிலேற்றால் அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று (7) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். அக்கரைப்பற்றைச் சேர்ந்த 24மேலும் படிக்க...
நீர்கொழும்பு சிறை சம்பவம் – பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து சிறைத்துறை ஆணையர் நாயகம் விளக்கம்

நேற்றையதினம் (06) நீர்கொழும்பு சிறையில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்த உண்மைகளை சிறைத்துறை ஆணையர் நாயகம் இன்று (07) தெளிவுபடுத்தினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்மேலும் படிக்க...
அதிமுகவில் டிடிவி தினகரனை சேர்க்க வேண்டும்: தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் பழனிசாமியிடம் கோரிக்கை

டெல்டா மாவட்டங்களில் அதிமுக வலுப்பெற கட்சியில் டிடிவி தினகரனை சேர்க்க வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் பழனிசாமியிடம் நேற்று கோரிக்கை வைத்துள்ளனர். அதிமுக சார்பில், நடந்து முடிந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தல் முடிவுகள் குறித்தும், கட்சியின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப் பணிகள் குறித்தும்மேலும் படிக்க...
அவசர ஒத்திவைப்பு விவாதமொன்றை கோரியுள்ள எதிர்க்கட்சி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்கள் குறித்து பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவருவதற்காக, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அவசர ஒத்திவைப்பு விவாதமொன்றைக் கோரி சபாநாயகருக்குக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. இதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரஞ்சித் மத்தும பண்டார, கபீர்மேலும் படிக்க...
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்குக் காரணமான சுரேஷ், பூஸ்ஸ சிறைக்கு மாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்குக் காரணமானவர் எனக் கூறப்படும் ‘கட்டுவெல்லேகம சுரேஷ்’ என்பவர் பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தற பத்மே’ என்பவரின் நெருங்கிய கூட்டாளி எனக் கூறப்படும் கட்டுவெல்லேகம சுரேஷ் மீது, கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்துதல்,மேலும் படிக்க...
ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்றுகொண்டிருந்த வணிகக் கப்பல்கள் மீது, திங்கட்கிழமை (06) இரவு ஈரானின் புரட்சிகரப் படையினர் குறைந்தது இரண்டு ஏவுகணைகளை ஏவியதாக, இரண்டு அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி ‘ஆக்சியோஸ்’ (Axios) செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி வெளியானமேலும் படிக்க...
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் – உயிரிழப்பு எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதியில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மோதலில் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார், அதன்படி, 07 சிறைச்சாலை அதிகாரிகள்மேலும் படிக்க...
இந்த ஆண்டில் இதுவரை வீதி விபத்துகளில் 1,424 பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 1,424 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேசிய விபத்துத் தடுப்பு வாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய போக்குவரத்து கட்டுப்பாடுமேலும் படிக்க...
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பாட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்

நீர்கொழும்பு, சிறைச்சாலையில் ஏற்பட்டிருந்த அமைதியின்மையை பாதுகாப்புப் படையினர் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சிறைச்சாலையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பெருமளவிலான பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) வீரர்களும் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும், பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுமேலும் படிக்க...
