Day: April 6, 2021
அறிவுரை கூறி பிடுங்கிய செல்போனை திருப்பி கொடுத்த அஜித்
வாக்களிக்க வந்த தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற நபரின் செல்போனை பிடுங்கி அறிவுரை கூறி திருப்பி கொடுத்து இருக்கிறார் நடிகர் அஜித்குமார். அஜித்தமிழக சட்டசபைக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் பலரும்மேலும் படிக்க...
மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பது ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையை காட்டுகிறது- மு.க.ஸ்டாலின் பேட்டி
ஆளுங்கட்சியினருக்கு தோல்வி பயம் வந்துவிட்ட காரணத்தால் எப்படியாவது தேர்தலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரி வாக்குசாவடியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- எங்களது ஜனநாயக கடமையை நாங்கள் ஆற்றி இருக்கிறோம்.மேலும் படிக்க...
செல்பி எடுக்க வந்த ரசிகர்…. கோபத்தில் செல்போனை பிடுங்கிய அஜித்
தன் மனைவியுடன் வாக்களிக்க வந்த அஜித்துடன் ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்ற போது செல்போனை பிடுங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அஜித்தமிழக சட்டசபைக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் தங்கள் ஜனநாயகமேலும் படிக்க...
சைக்கிளில் வந்து ஸ்கூட்டரில் திரும்பிய விஜய்
தேர்தலில் வாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய் திரும்பி செல்லும் போது ஸ்கூட்டரில் சென்றதற்கான காரணம் வெளியாகியுள்ளது. விஜய்தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. அரசியல் மற்றும் திரைப்பிரபலங்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்களது வாக்கை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். நடிகர்களில் ரஜினிகாந்த்,மேலும் படிக்க...
சென்னை ஆழ்வார் பேட்டை வாக்குச் சாவடியில் குடும்பத்துடன் வாக்களித்த கமல்ஹாசன்
சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது குடும்பத்துடன் வாக்குகளை செலுத்தினார்.சென்னை:தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும்,மேலும் படிக்க...
234 தொகுதியிலும் மக்கள் ஆர்வம் – தமிழகத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
தமிழகத்தில் ஓட்டுப்பதிவு தொடங்கியதும் சில வாக்குச்சாவடிகளில் ஓட்டு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. அங்கு சிறிது நேரம் ஓட்டுப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டு பின்னர் மாற்று எந்திரங்கள் மூலம் ஓட்டுப்பதிவு தொடர்ந்து நடந்தது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு கடந்தமேலும் படிக்க...
இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் செபஸ்தியார் பேராலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது!
மறைந்த மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் வரை இறுதி அஞ்சலிக்காக மன்னார் புனித செபஸ்தியார்மேலும் படிக்க...
கொரோனா பரவலுக்கு மத்தியில் இலங்கையின் செயற்பாடு குறித்து சர்வதேச சமூகம் பாராட்டு
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இலங்கையின் செயற்பாடு குறித்து சர்வதேச சமூகம் பாராட்டு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலினால் நாட்டில் கர்ப்பிணி தாய்மார்களின் மரணங்கள் அதிகரித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில், சுகாதார அமைச்சுடன் இணைந்து ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்மேலும் படிக்க...
பொதுமக்கள் பொறுப்பு அற்றவர்களாக இருக்கக் கூடாது – அமைச்சர் கெஹலிய
புத்தாண்டு காலப்பகுதியில் பொதுமக்கள் பொறுப்பற்றவர்களாக இருக்கக்கூடாது என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அரசாங்கமும் பொலிஸாரும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கமும் இணைந்து சிறிய அளவிலான விழாக்களை நடத்த அனுமதித்துள்ளன என்றும் கூறினார். இருப்பினும் கொரோனா தொற்றின் மூன்றாவதுமேலும் படிக்க...
மட்டக்களப்பில் உள்ள முக்கிய பிரச்சினை: சபையில் காட்டமாக கேள்வியை முன் வைத்தார் சாணக்கியன்
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இருதயவியல் பிரிவின் ஆய்வக (Cardiology Unit – Cardiac Catheterization Laboratory) வசதிகளை செய்துகொடுக்க சுகாதார அமைச்சு இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக,மேலும் படிக்க...
திருமதி இலங்கை அழகியின் கிரீடத்தை பறித்த கரோலின் ஜூரி: ரோஸி சேனநாயக்க அதிருப்தி
இலங்கையில் நடத்தப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான திருமதி இலங்கை அழகிப் போட்டியின்போது, கரோலின் ஜூரியின் நடத்தையை பார்த்து வெறுப்படைந்ததாக கொழும்பு மேயர் ரோஸி சேனநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் கரோலின் ஜூரி, குறித்த நிகழ்வில் செயற்பட்ட விதம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல எனவும் அவர்மேலும் படிக்க...