Sunday, January 27th, 2019

 

லெனின்கிராட் முற்றுகை முடிவுறுத்தப்பட்டு 75 வருடங்கள்!

ரஷ்ய வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய முற்றுகைக் போராட்டமான லெனின்கிராட் (முற்றுகை கைவிடப்பட்டு இன்றுடன் 75 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. அதனை நினைவுகூர்ந்து சயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் பாரிய இராணுவ அணிவகுப்பொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. சுமார் 100 இராணுவ வாகனங்கள் சகிதம் 2,500 துருப்புக்கள் குறித்த அணிவகுப்பில் பங்கேற்றன. ரஷ்ய படைகளுக்கு எதிராக நாசிப்படைகள் முன்னெடுத்த மிகப்பெரிய முற்றுகையின்போது இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பட்டினி மற்றும் தாக்குதல்களில் இந்த பாரிய உயரிழப்பு நேர்ந்தது. ரஷ்ய வரலாற்றில் பதிவான மிக மோசமான இந்த சம்பவம், 872 நாட்களுக்கு பின்னர் கடந்த 1944 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் திகதி முடிவுறுத்தப்பட்டது.


சீனா – பிரான்ஸ் இராஜதந்திர உறவு ஏற்படுத்தப்பட்டு 55 வருடங்கள் பூர்த்தி

சீனாவிற்கும் பிரான்ஸிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) 55 வருடங்கள் பூர்த்தியாகின்றது. இதனை முன்னிட்டு இரு நாடுகளின் தலைவர்களும் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொண்டனர். குறிப்பாக இரு நாடுகளும் இருதரப்பு உறவை வலுப்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் தெரிவித்துள்ளார். இந்த நூற்றாண்டில் உலகம் பல மாற்றங்களை எதிர்கொண்டுள்ளது. மனித சமுதாயமும் அபிவருத்தி மற்றும் இதர வாய்ப்புக்களில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில், பிரான்ஸூடன் தொடர்ந்தும் இணைந்து பணியாற்ற சீனா விருப்பம் கொண்டுள்ளதென குறிப்பிடடுள்ளார். சீனா – பிரான்ஸ் மூலோபாய கூட்டு நடவடிக்கையின் பிரகாரம், உலக சமாதானம், நிலையான அபிவிருத்தி ஆகியவற்றில் இணைந்து பணியாற்ற கடமைப்பட்டுள்ளோம் என்றும் சீன ஜனாதிபதி கூறியுள்ளார். இதேவேளை, இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவானது, இரு நாடுகளினதும் சமாதானத்தின் சமிக்ஞை என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கூறியுள்ளார்.மேலும் படிக்க…


துரோகம் செய்யும் அரசியல்வாதிகளை சமூகத்தில் இருந்து ஒதுக்க வேண்டும்: மலையக இந்து குருமார் ஒன்றியம்

துரோகம் செய்யும் அரசியல்வாதிகளை சமூகத்தில் இருந்து ஒதுக்க வேண்டும் என இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியம் தொழிலாளர்களை வலியுறுத்தியுள்ளது. சம்பள உடன்படிக்கை தொடர்பில் செய்து கொள்ளப்படவுள்ள புதிய ஒப்பந்தத்தை நிராகரிப்பதாக தெரிவித்திருக்கும் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ. வேலு சுரேஷ் சர்மா இதனை வலியுறுத்தியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஹற்றனில் அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாளாந்த வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்லமுடியாத நிலையில் வாழும் இத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான சம்பளத்தையே அடிப்படையாக பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும். பல போராட்டங்களை முன்னெடுத்தமையால் குறித்த சம்பள தொகையேனும் எட்டப்பட்டிருக்கின்றது. ஆயிரம் ரூபாவைப் பெற்றுக்கொடுக்க முன்வராத பட்சத்தில் தொழிற்சங்கங்களுக்கு கொடுக்கும் சந்தாவை நிறுத்தி விட்டு சட்ட ரீதியாகப் போராடுவதற்கு முன்வந்தால் அதில் ஏற்படும் சிக்கல்களுக்குமேலும் படிக்க…


போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்பவேண்டும் – அரசு எச்சரிக்கை

பல கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை நாளைக்குள் பணிக்குத் திரும்புமாறு அரசு பணித்துள்ளது. அவ்வாறு பணிக்கு வரத்தவறினால், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளது. குறித்த அறிக்கையில், “போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். நாளைக்குள் பணிக்குத் திரும்பும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது. அவர்கள் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளிகளில் பணியை தொடரலாம். ஆனால் பணிக்கு வரத்தவறினால் புதிய இடத்தில் பணியமர்த்தப்படுவார்கள். ஜனவரி 28 ஆம் திகதிக்குப் பின்னர் தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படவுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் கடந்த 22 ஆம் திகதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. இப்போராட்டம் இன்று 6 ஆவது நாளாக தொடர்கின்றது. கடந்தமேலும் படிக்க…


மம்தா தலைமையிலான திரிணாமுல் கட்சி 14 மாநிலங்களில் போட்டி

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 14 மாநிலங்களில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ளது. இக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்காள மாநில முதலமைச்சருமான மம்தா பனர்ஜி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைஅறிவித்துள்ளார். மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்றும், ஒடிசா உட்பட 14 மாநிலங்களிலும் இந்த தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார். மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் கடந்த 19 ஆம் திகதி பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், நாடு முழுவதிலும் இருந்து 22 முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று பேசியிருந்தனர். இந்நிலையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 14 மாநிலங்களில் போட்டியிடுவோம் என மம்தா பனர்ஜி அறிவித்துள்ளார்.


அரசியலமைப்பு விவகாரம் – வடக்கு மக்களை பிரதமர் ஏமாற்றுகின்றார்: டிலான் பெரேரா

புதிய அரசியல் யாப்பு ஒன்றைக் கொண்டுவரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கு மக்களை வஞ்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “புதிய அரசியல்யாப்பு ஒன்றை கொண்டுவரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கு மக்களிடம் பொய் கூறி வருகின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைச் சேர்ந்த சிலர் இந்த நாட்டை பவுனுக்காகவும், டொலருக்காகவும் காட்டி கொடுத்துள்ளனர். இந்த செயற்திட்டத்தில் பிரதான பங்கை ரணிலே வகிக்கின்றார். அதனால்தான் இன்று உத்தியோகப்பற்றற்ற பிரதமராக சுமந்திரன் செயற்பட்டு வருகின்றார். வடக்கில் வாக்குகளைப் பெற இவர்கள் அரசியல் யாப்பு தொடர்பில் ஒரு கருத்தை கூறி வருகின்றனர். அதேபோல் தெற்கிற்கு வேறு பிரதி ஒன்றை காண்பிக்கின்றனர். இவர்களின் செயற்பாடுகளினால் இருமேலும் படிக்க…


இறுதிவரை மஹிந்த எதிர்க்கட்சித் தலைவராகவே இருப்பார்: அமைச்சர் மனோ

இறுதிவரை மஹிந்த எதிர்க்கட்சித் தலைவராகவே இருப்பார். அவர் ஒருபோதும் இனிமேல் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ ஆகப்போவதில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு விஜயராம வித்தியாலயத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நடமாடும் சேவையில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் ஒருசிலர் எமது அரசாங்கத்தினை திருட்டு வழியில் கைப்பற்றியிருந்தார்கள். அவர்கள் அனைவரும் திருடர்கள் அவர்களால் ஏற்படுத்தப்பட்டதும் திருட்டு அமைச்சரவையே. இந்நிலையில் நாம் சட்டத்தின் துணைகொண்டு நீதிமன்றத்தின் மூலம் மக்களின் ஆதரவுடன் அந்த திருட்டு அரசாங்கத்தினைச் சேர்ந்தவர்களை விரட்டியடித்தோம். மக்கள் வாக்களித்து உருவாக்கிய இந்த நல்லாட்சி அரசாங்கத்தினை காப்பாற்ற வேண்டியது எமது பொறுப்பு. அத்துடன் மக்கள் எம்மைத் தெரிவுசெய்ததன் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டியதும் அரசியல்வாதிகளான எமது பொறுப்பு” என அமைச்சர் மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டார்.


தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகம் மீது தாக்குதல்!

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகம் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு (சனிக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். குறித்த அலுவலகத்தில் இரவு யாரும் இல்லாத சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அலுவலகத்தில் முன் கதவு கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதுடன், அலுவலகத்தின் சில பகுதிகள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சிப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


நாடு முழுவதும் 69,000 ஆர்ப்பாட்டக்காரர்கள்

நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற பதினோராவது வார மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் நாடு முழுவதும் 69,000 பேர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வார ஆர்ப்பாட்டத்தில் 84,000 பேர் கலந்துகொண்டிருந்த நிலையில், இவ்வாரம் கணிசமாக எண்ணிக்கை குறைந்திருந்ததாக உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் பரிசுக்குள் 4,000 பேர் கலந்துகொண்டனர். place de la République இல் மஞ்சள் மேலங்கி போராளிகள் பலர் கூடியிருந்தனர். அங்கு வன்முறைகள் எதுவும் வெடிக்கவில்லை என்றபோதும், அவர்கள் காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர். அதே வேளை, மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் முக்கிய ஒருங்கிணைப்பாளரான Maxime Nicolle நேற்று இரவு Bordeaux நகரில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் அவர் சில மணிநேரங்களிலேயே விடுவிக்கப்பட்டார். உள்துறை அமைச்சர் Christophe Castaner நேற்றைய வன்முறைகளை கண்டித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


2038ஆம் ஆண்டிற்குள் நிலக்கரிப் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டு வரும் ஜேர்மனி!

ஜேர்மனி, மின்சார உற்பத்திக்காக நிலக்கரியைப் பயன்படுத்துவதை 2038ஆம் ஆண்டுக்குள் நிறுத்திக் கொள்ளும் என அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தூய்மைக்கேட்டை ஏற்படுத்தும் நிலக்கரியின் பயன்பாட்டைக் கட்டங்கட்டமாக முடிவுக்குக் கொண்டுவரும் 80 பில்லியன் யூரோ திட்டத்தை ஆணைக்குழு வெளியிட்டது. பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான கடப்பாட்டை வலுப்படுத்த ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட ஜேர்மனி கடுமையான நெருக்குதலை எதிர்நோக்கி வந்தது. பல மாதக் காரசார விவாதத்துக்குப் பின்னர் நிலக்கரிப் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான காலக்கெடு குறித்து ஆணைக்குழு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளது.


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசின் இறுதிப்போட்டியில் ரபேல் நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் செர்பியாவின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச்சும், ஸ்பெயின் வீரரான 2ம் நிலை வீரரான ரபேல் நடாலும் மோதினர். ஜோகோவிச் ஆட்டத்திற்கு நடாலினால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் ஜோகோவிச் 6-3, 6-2, 6-3 என நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் ஏழாவது முறையாக பட்டம்  வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் சாய்னா

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார். இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் சாய்னா நேவால், ஸ்பெயினின் கரோலினா மரின் ஆகியோர் முன்னேறினர். இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது. போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. சாய்னா 3-10 என பின்தங்கிய நிலையில் இருந்தபோது, கரோலினா மரினுக்கு தொடைப்பகுதியில் (hamstring injury) காயம் ஏற்பட்டது. இதனால் போட்டியில் இருந்து விலகினார். ஆகவே, சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார்.


அமெரிக்காவில் பெற்றோர், காதலி உள்பட 5 பேரை சுட்டுக் கொன்ற இளைஞர்

அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலம் லூசியானாவில் பெற்றோர், காதலி உள்பட 5 பேரை சுட்டுக்கொன்று தப்பிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலமான லூசியானாவின் கொன்சாலெஸ் நகரில் வசித்து வந்தவர்கள் எலிசபெத் தேரியட் மற்றும் கெய்த் தேரியட். 51 வயது நிறைந்த இந்த தம்பதியின் மகன் டகோட்டா தேரியட் (வயது 21). டகோட்டா தனது பெற்றோரை துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதில் அவர்கள் படுகாயமடைந்து உள்ளனர். இந்த தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர்களை சுட்டது டகோட்டா என போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில், டகோட்டாவின் பெற்றோர் உயிரிழந்து விட்டனர். இதேபோன்று அருகே உள்ள மற்றொரு பகுதியில் துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். அவர்கள் பில்லி எர்னெஸ்ட் (வயது 43), டேனர் எர்னெஸ்ட் (வயது 17) மற்றும்மேலும் படிக்க…


தெற்கு பிலிப்பைன்சில் இரண்டு இடங்களில் குண்டு வெடிப்பு: 19 பேர் பலி

தெற்கு பிலிப்பைன்ஸ் ஜோலோ தீவில் கத்தோலிக்க தேவாலயத்தை குறிவைத்து தாக்கப்பட்ட குண்டு வெடிப்பில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தெற்கு பிலிப்பைன்சில் உள்ள தீவு ஜோலோ. இங்குள்ள ரோமன் கத்தோலிக் தேவாலயத்திற்கு அருகில் பயங்கர சத்தத்துடன் இன்று குண்டு வெடித்தது. சிறிது நேரம் கழித்து அரசுப் படைகள் தங்கியிருந்த முகாம் அருகில் மற்றொரு குண்டு வெடித்தது. இதில் அரசுப் படைகள் மற்றும் பொதுமக்கள் என 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 48 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ‘‘குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் பாதுகாப்பை அதிகரிக்கவும் பொதுமக்கள் கூடும் இடம், வழிபாட்டுத் தலங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்’’ என்று பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.


பிஜி தீவில் 6.2 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

தென்பசிபிக் கடலில் அமைந்துள்ள பிஜி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 6.2 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மேலும் உயிர் சேதம், பொருட் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, குறித்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எவையும் விடுக்கப்படவில்லை. பசிபிக்கடல் பிராந்தியத்திலுள்ள பிஜி தீவுகள் பூகம்ப அபாய வளையத்தில் காணப்படுகின்றது. இதன்காரணமாக அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவின் அதிவேக ரயிலுக்கு பெயர் சூட்டப்பட்டது

இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்பான அதிவேக ரயிலுக்கு ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிவேக ரயில் சேவை விரைவில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இந்தியா அதிவேக ரயில்களை தயாரித்துவருகிறது. இந்நிலையில், புதிதாக இந்தியா தயாரித்துள்ள அதிவேக ரயிலுக்கு இன்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக ரயில்வே துறை மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் பல வழித்தடங்களில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ரயில்களின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதற்காக அதிவிரைவு ரயில் பெட்டிகள் தயாரிக்க வெளிநாட்டு நிறுவனங்களிடம் கேள்விமனு கோரப்பட்டது. ஆனால், வெறும் 315 பெட்டிகளைத் தயாரிக்க எந்த நிறுவனமும் முன்வராததால் வெளிநாட்டு தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் தயாரிக்க தீர்மானிக்கப்பட்டது. முதல்கட்டமாக 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரு ரயில்களுக்கான பெட்டிகளை சென்னை வில்லிவாக்கம் அருகில் உள்ள இணைப்பு பெட்டிமேலும் படிக்க…


தமிழகத்தின் கூட்டணி தலைமையை அ.தி.மு.க ஏற்கும்: ஜெயக்குமார்

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியின் தலைமையை அ.தி.மு.க.வே  ஏற்குமென அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை நேற்று (சனிக்கிழமை) சந்தித்த ஜெயக்குமார் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க  பாரிய வெற்றியை  நிச்சயம்  அடையுமென அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஆகவே மத்தியில் முக்கிய சக்தியாக அ.தி.மு.க திகழும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லையெனவும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழில் போராட்டம்

வடக்கில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை, மற்றும் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது . ஐனநாயகத்துக்கான இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பிரதான பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்னால், இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. போதைப் பொருளைக் கட்டுபடுத்த வேண்டும், சிறுவர் பெண்கள் துஸ்பிரயோகத்தை கட்டுபடுத்த வேண்டும், தோட்டத் தொழிலாளர்களது சம்பளத்தை 1000 ரூபாயாக உயர்த்த வேண்டும் போன்ற கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும் இளைஞர்களது வேலைவாய்ப்புக்களை உறுதிப்படுத்த வேண்டும், இதற்கு அரசியல் தலைமைகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில்  ஜனநாயகத்துக்கான இளைஞர் அமைப்புடன் இணைந்து மேலும் பல இளைஞர்களும் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது – பிரதமரிடம் முதலமைச்சர் பரிந்துரை

தமிழகத்தின் முன்னாள் தலைவர்களான அறிஞர் அண்ணா மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிந்துரை செய்துள்ளார். மதுரை, தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமரிடம் முதலமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இதன்போது, முக்கியமான 17 கோரிக்கைகளை எழுத்துமூலம் பிரதமர் மோடியிடம் அவர் கையளித்தார். அதில் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனவும், சென்னை மத்திய ரயில் நிலையத்திற்கு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பெயர் சூட்டவேண்டும் எனவும், ஓசூர், நெய்வேலி, இராமநாதபுரம் நகரங்களில் உதான் திட்டத்தின் கீழ் விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரியுள்ளார். அத்துடன், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவிற்கு அளித்த அனுமதியை திரும்பபெற வேண்டும்மேலும் படிக்க…


யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது புதிய உத்தரதேவி ரயில்!

கொழும்பிலிருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்த உத்தரதேவி ரயில் பிற்பகல் 2.40 மணியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. இந்த ரயிலில் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர், ரயில் நிலைய அதிகாரிகள், எனப் பலரும் பயணம் மேற்கொண்டிருந்தனர். குறித்த ரயிலினை தமிழரசுக் கட்சியின் தலைவர் மவை சேனாதிராசா, யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் ஆகியோர் யாழ்.பிரதான புகையிரத நிலையத்தில் வைத்து வரவேற்றனர். இந்த வரவேற்பு நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. இதேவேளை கிளிநொச்சி – அறிவியல் நகரில் புதிதாக அமைக்கப்பட்ட ரயில் நிலையம் இன்று மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது. இன்று காலை 11 மணியளவில் கொழும்பில் இருந்து புறப்பட்ட உத்தராதேவி ரயில் முதன்முதலாக குறித்த ரயில் நிலையத்தில் தரித்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.


படைமுகாம் வாயிலிலிருந்து வெளியேறினர் கேப்பாப்புலவு மக்கள்

நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய படைமுகாம் வாயிலிலிருந்து 75 மீற்றர் தொலைவில் தமது போராட்டத்தை தொடர்ந்தும் முன்னடுத்திருப்பதாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர். அத்தோடு இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கும்வரை தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். முல்லைத்தீவு – கேப்பாப்புலவு பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள், நேற்றிலிருந்து படைமுகாம் வாயிலில் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை படைமுகாம் வாயிலிலிருந்து 75 மீற்றர் தொலைவில் சென்று போராட்டம் நடத்துமாறும், குறித்த பகுதியில் போக்குவரத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு செயற்படுமாறு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி படைமுகாம் வாயிலிலிருந்து 75 மீற்றர் தொலைவில் சென்று போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கேப்பாப்புலவில் உள்ள தங்களதுமேலும் படிக்க…


இரண்டாவது நாளாகவும் தொடரும் சத்தியாகிரக போராட்டம்!

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வை வழங்கக்கோரி டிக்கோயா சலங்கந்தை பகுதியைச் சேர்ந்த சிவனு கணேசன் என்பவரினால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. அதன்படி அவர் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றார். இதன்போது, ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளம் என வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்திய தொழிற்சங்கங்கள் தற்பொழுது 700 ரூபாய்க்கு கையொப்பம் இடுவதற்கு தயாராகுவதாகவும், அதற்கு தான் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார். அத்தோடு நாளைய தினத்தை தொழிலாளர்கள் அனைவரும் கறுப்பு தினமாக அனுஷ்டிக்க வேண்டும் என்பதோடு, கறுப்பு பட்டிகளை அணிந்துகொண்டு தொழிலுக்குச் செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் பாராமுகமாக செயற்படாமல் உடனடியாக தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும், கொழும்பில் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மலையக இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்தும்மேலும் படிக்க…


பிரிக்க முடியாத நாட்டில் அனைத்து உரிமைகளையும் தமிழர்கள் அனுபவிக்க வேண்டும்: வடக்கு ஆளுநர்

பிரிக்கமுடியாத நாட்டில் அனைத்து உரிமைகளையும் தமிழர்கள் அனுபவிக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி – அறிவியல் நகரில் புதிதாக அமைக்கப்பட்ட புகையிரத நிலையம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பிளவுபடாததும், பிரிக்க முடியாததுமான நாட்டில் அனைத்து உரிமைகளையும் சுதந்திரங்களையும் அனுபவிக்கும் நிலைக்கு தமிழர்கள் வரவேண்டும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பதுடன், இது தொடர்பான கோரிக்கைகளை நாம் உரிய தரப்பினரிடம் முன்வைத்திருக்கின்றோம். யுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகளைக் கடந்து செல்லும் நாம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த ரயில்சேவையினை வடக்கையும் தெற்கையும் இணைக்கும் உறவுப்பாலமாகவே நாம் பார்க்கின்றோம். இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் எமது வேற்றுமைகளைக் களைந்து செயற்படுவதற்குமேலும் படிக்க…


சங்கமம் – 27/01/2019


வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 211 (27/01/2019)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 211 ற்கான கேள்விகள்  அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 22,31 இடமிருந்து வலம் 01 – 06 மொழியை சிதைவடைய செய்யும் காரணிகளுள் இதன் தவறான மாதிரியும் ஒன்று 09 – 11 மேன்மைமேலும் படிக்க…


Neuilly-sur-Seine பிரபலங்களின் நகரம்

Neuilly-sur-Seine, பரிசின் புறநகர்களில் ஒன்று. இல்-து-பிரான்சுக்குள் இருக்கும் மிக முக்கியமான நகரமும் கூட. ஏன்? பாரிசின் புறநகர்களில் மிகவும் செல்வம் கொழிக்கும் நகரமும், ‘பணக்கார’ நகரமும் இதுவாகும். உலகின் மிக முக்கியமான நிறுவனங்களின் தலைமைச் செயலகமும் இங்கு தான் உண்டு. எப்போதும் செல்வந்தர்கள் போன்று அமைதியாகவே இருக்கும் நகரம். இங்கு பிறந்த பிரபலங்கள் ஒரு தொகை உண்டு உங்களுக்குத் தெரியுமா? தற்போதைய இல்-து-பிரான்ஸ் மாகாண முதல்வர் Valérie Pécresse இங்கு தான் பிறந்தார். தற்போது பணி நிமிர்த்தம் அவர் பாரிசில் வசிக்கிறார். தேசிய முன்னணி கட்சியின் தலைவர் மரீன் லூ பென். அவரும் இங்கு தான் பிறந்தார். தற்போதும் இங்குதான் வசிக்கின்றார். பிரான்ஸ் சினிமா நடிகரும் இயக்குனருமான François Truffaut உம் இங்கு தான் பிறந்தார். பிரான்சின் முதலாம் பணக்காரர் மற்றும் செல்வந்த பெண்மணியான L’Oréal நிறுவனத்தின்மேலும் படிக்க…


விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு கோமகன் பிலிப் மன்னிப்புக் கடிதம்!

சன்ரிங்காம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த பெண்ணிடம், கோமகன் பிலிப் மன்னிப்புக் கோரியுள்ளார். காயமடைந்த பெண் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார். காயமடைந்த பெண்ணுக்கு கோமகன் பிலிப் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இவ்விடயங்களை குறிப்பிட்டுள்ளார். கடந்த 17ஆம் திகதி சன்ரிங்காம் பகுதியில் கோமகன் பிலிப் பயணித்த கார், எதிரே வந்த மற்றுமொரு காருடன் மோதி விபத்திற்குள்ளானது. இதில், எதிரே வந்த காரை செலுத்திய பெண் சிறிது காயங்களுக்கு உள்ளானர். காரிலிருந்த அவரது 9 வயது குழந்தை உயிரித்தப்பியது. எனினும், 46 வயதான அவருடைய தாய் மணிக்கட்டு உடைவுக்கு உள்ளானார். இந்நிலையில், கோமகன் பிலிப் இக்கடிதத்தை அனுப்பியுள்ளார்.  கடிதத்தை பெற்ற குறித்த பெண்மணி, மிகவும் உணர்வுபூர்வமான அனுபவம் எனக் கூறியுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !