Main Menu

20ஆம் திகதி அனைத்து பாடசாலைகளும் விடுமுறை

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 20 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு மூடப்படவுள்ள பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், வாக்களிப்பு மத்திய நிலையமாக பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகள் செப்டெம்பர் 19 ஆம் திகதி பாடசாலை நேரத்தின் பின்னர் தேவைக்கேற்ப கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.வாக்கெண்ணும் நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் உரிய காலப்பகுதிக்குள் மாத்திரம் மூடப்படுமென கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.