18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன் (20/05/2019)
தாயகத்தில் புங்கையூரை சேர்ந்த கணேச ராஜ குருக்கள் சிவசுதக் குருக்கள் அராலி சசிகலா சிவசுதகுருக்கள் தம்பதிகளின் செல்வப்புதல்வன் சிபிவிஸ்டன் 18ம் திகதி மேமாதம் சனிக்கிழமை அன்று வந்த தனது 18வது பிறந்தநாளை 20ம் திகதி திங்கட்கிழமை இன்று பிரான்ஸ் Le Bourget இல் உள்ள தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார்.
இன்று 18வது பிறந்தநாளை கொண்டாடும் சிபி விஸ்டனை அன்பு அப்பா அன்பு அம்மா அண்ணா ராஜவர்மன் அன்பு அக்கா சைனிகா அத்தான் நிசாகர், அராலியில் வசிக்கும் அன்பு பாட்டி, மற்றும் பெரியப்பாமார், பெரியம்மாமார், மாமாமார், மாமிமார், சித்தப்பாமார், சித்திமார், மச்சான்மார், மச்சாள்மார், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஸ்ரீ காமாட்சி அம்மன் துணையுடன் சகல கலைகளும் கற்று பல்லாண்டு காலம் நிறைவாக வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று 18வது பிறந்தநாளை கொண்டாடும் சிபி விஷ்டனை தமிழ் ஒலியில் பணி புரியும் அன்ரிமார் மாமாமார் அன்பு நேயர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பெற்றோர் சுதன் சர்மா ஐயா, சசி அம்மா தம்பதிகள்.
அவர்களுக்கும் எமது நன்றிகள்.