Main Menu

112-வது ஜெயந்தி விழா- முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை

முத்துராமலிங்கத் தேவரின் 112வது ஜெயந்தி விழாவையொட்டி அவரது சிலைக்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்வர்மதுரை:
முத்துராமலிங்க தேவரின் 112வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் முழு உருவ சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

இதேபோல் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் முழு உருவ சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தேவர் ஜெயந்தியையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

பகிரவும்...