Main Menu

வெனிசியூலாவுக்கு உடனடி தேர்தல் கிடையாது

வெனிசியூலாவுக்கு உடனடி தேர்தல் கிடையாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப் தெரிவித்துள்ளார் .

அடுத்த முப்பது நாட்களுக்குள் வெனிசியூலாவில் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார் .

வெனிசியூலா சட்டப்படி  ஜனாதிபதி பதவி காலியானால் , முப்பது நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் . ஆனால் , இந்த சட்ட விதியை ட்ரம்ப் நிராகரித்துள்ளார்

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது,

முதலில் வெனிசியூலாவை சரி செய்ய வேண்டும் . சிதைந்துள்ள அந்நாட்டின் பொருளாதாரத்தை பழைய நிலைக்கு கொண்டு வர கால அவகாசம் தேவை . அந்நாட்டில் நிலவும் சூழலில்  குறுகிய காலத்திற்குள் தேர்தலை  நடத்த சாத்தியமற்றது . மேலும் , தற்போது மக்கள் வாக்களிக்கக்கூடிய நிலையில் நாடு இல்லை . ஆகையால் , அடுத்த முப்பது நாட்களுக்குள் வெனிசியூலாவின் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை

அந்நாட்டின் தற்போதைய நிலையை அமெரிக்காவே கவனித்துக் கொள்ளும் . இடைக்கால  ஜனாதிபதி  டெல்சி ரோட்ரிக்ஸ் அமெரிக்க அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறார் . இவ்வாறு அவர் கூறினார்

இதேவேளை வெனிசுலா விவகாரங்களை கவனிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் இராணுவ அமைச்சர் பீட்டர் ஹெக்செத் ஆகியோர் அடங்கிய உயர்மட்ட குழுவை ட்ரம்ப் நியமித்துள்ளார்.

ட்ரம்பின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பகிரவும்...