Main Menu

விஜய்யின் வருகை சீமானுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது- கார்த்தி சிதம்பரம்

விஜய், தமிழக அரசியல் களத்திற்குள் நுழைந்துள்ளார். அவர் கட்சியான தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“விஜய் தனது கொள்கையை தெளிவாக, வெளிப்படையாக சொல்ல வேண்டும். மேலும் அவரது மாநாட்டில் உத்வேகம் இருந்தது. அது அமைப்பாக மாறி, தேர்தலை சந்திக்கும் அளவுக்கு செல்லுமா? என்பதை காலம் தான் சொல்லும். சாதுரியமாக அல்லது பிம்பத்தின் அடிப்படையில் முடிவு எடுப்பார்களா என்பதை பார்க்க வேண்டும். அரசியல் கட்சியின் செயல்பாடு, நடத்தை, கொள்கை போக, போக தான் தெரியும். சீமான் கட்சிக்கு நிரந்தர வாக்குகள் கிடையாது. இதனால் அவருக்கு யதார்த்தமான அச்சம் வந்துள்ளது” என்று தெரிவித்தார்.

பகிரவும்...
0Shares