Main Menu

வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் 50 வீதம் நிறைவு – அரச அச்சகம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் 50 வீதம் வரை நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.அச்சிடப்பட்டுள்ள வாக்குச்சீட்டுகள் தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறியுள்ளார்.உத்தியோகப்பூர்வ வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகளை அடுத்த வாரத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக அரச அச்சகம் குறிப்பிட்டுள்ளது.இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.