Main Menu

வரலாற்றில் அதிக வரி வருமானத்தை ஈட்டியுள்ள இலங்கை சுங்கத் திணைக்களம்

இலங்கை சுங்கத் திணைக்களம் வரலாற்றில் அதிக வரி வருமானத்தை ஈட்டியுள்ளது.
இந்த வருடத்தில் எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமான வரி வருமானத்தை இலங்கை சுங்கத் திணைக்களம் ஈட்டியுள்ளதாக மேலதிக பணிப்பாளர் நாயகமும் பேச்சாளருமான சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
வரி வருமானத்தின் ஊடாக இந்த வருடத்தில் 1.53 ட்ரில்லியன் ரூபா எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கமைய, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1.38 ட்ரில்லியன் ரூபாவை வரி வருமானமாக இலங்கை சுங்கத் திணைக்களம் ஈட்டியுள்ளது.
பகிரவும்...
0Shares