Main Menu

வங்கிகளுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை- சக்தி காந்ததாஸ் அறிவிப்பு

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) 4 சதவீதமாக தொடரும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் கூறினார்.


ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பிறகு ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) 4 சதவீதமாக தொடரும். 9-வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.

வங்கிகள், ரிசர்வ் வங்கியில் செய்யும் டெபாசிட்களுக்கான வட்டி விகிதமும் 3.35 சதவீதம் என முந்தைய அளவிலேயே தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு காரணமாக வீடு, வாகனக்கடன் உள்ளிட்ட வங்கிக்கடன்களின் வட்டி விகிதம் பழைய அளவிலேயே தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது.

பகிரவும்...