Main Menu

லொஹான் ரத்வத்தவுக்கும் அவரது மனைவிக்கும் பிணை

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஷஷி பிரபா ரத்வத்தை ஆகியோரை பிணையில் விடுவிக்க நுகேகொடை நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (05) உத்தரவிட்டுள்ளது.

பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவர்கள் பிணையில் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

பகிரவும்...