Main Menu

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் : 7 பேர் பலி – 40 பேர் காயம்

இஸ்ரேல் லெபனான் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
லெபனானில் உள்ள உட்கட்டமைப்பு தளங்கள் மற்றும் ஆயுத களஞ்சியசாலை உள்ளிட்ட பகுதிகளில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததுடன், குழந்தை உள்ளிட்ட 40 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் இஸ்ரேல் மேற்கொண்ட மிகக் கடுமையான தாக்குதல் இதுவாகுமென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பகிரவும்...
0Shares