ரஷ்ய இராணுவத்தில் வடக்கு இளைஞர்கள் – மீட்டுத்தருமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்த பெற்றோர்கள்

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி ரஷ்ய இராணுவத்தில் சேர்த்ததாகக் கூறப்படுவது தொடர்பில் அவர்களது பெற்றோர்களால் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் இன்று (26) காலை முறைப்பாடு செய்யப்பட்டது.
தமது பிள்ளைகளை உடனடியாக மீட்டுத்தருமாறு குறித்த பெற்றோர்கள் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம், கரவெட்டி மற்றும் முள்ளியவளையைச் சேர்ந்த இளைஞர்களின் பெற்றோர்களே, ஆளுநரை இன்று நேரில் சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.
பெற்றோர்களது கோரிக்கையைச் செவிமெடுத்த ஆளுநர், உடனடியாக வெளிவிவகார அமைச்சின் செயலாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடயத்தைத் தெரியப்படுத்தினார்.
குறித்த 5 இளைஞர்கள் தொடர்பான விபரங்கள் பெறப்பட்டு, வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பகிரவும்...