Main Menu

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான சட்டமூலம் பேரவையில் தாக்கல்!

மேயர்,  பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான சட்ட திருத்த சட்டமூலம், சட்டப்பேரவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்த சட்ட திருத்தம் அமுலுக்கு வந்த பின்னரே  நகராட்சி, பேரூராட்சி தேர்தல்கள் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தலைவர்களுக்கான பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிறப்பித்தது.

இந்த சட்டத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்திருந்தார். ஆனால் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இன்று தாக்கல் செய்யப்படும் இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடலாம் என  எதிர்பார்க்கப்படுகின்றது. நேற்று ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க, அ.ம.மு.க.கட்சிகள் வெளிநடப்பு செய்தமை  குறிப்பிடத்தக்கது.