Main Menu

மெக்சிகோவில் ரயிலுடன் மோதுண்டு பேருந்து விபத்து; 10 நபர்கள் உயிரிழப்பு, 61 பேர் காயம்

மெக்சிகோவின் மத்தியப் பகுதியில் திங்கட்கிழமை (09) ஒரு சரக்கு ரயில் இரட்டை அடுக்கு பயணிகள் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

மேலும், 61 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மெக்சிகோ மாநிலத்தில் உள்ள அட்லகோமுல்கோ நகரிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பேருந்து சாரதி, ஒரு கடவையில் ரயிலுக்கு முன்னால் செல்ல முற்பட்ட போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ரயிலின் வேகம் பேருந்தை தண்டவாளத்தில் சிறுது தூரம் இழுத்துச் சென்றதாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

விபத்து குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விபத்தில் ஏழு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

பகிரவும்...
0Shares