Day: October 7, 2026
இலங்கை எல்லை மீற வேண்டாம்: தமிழக மீனவர்களுக்கு இந்திய உயர் நீதிமன்றம் அறிவுரை

கச்சத்தீவுப் பகுதியில் மீன்பிடிப்பதற்காக இலங்கை எல்லைக்குள் நுழைவதைத் தவிர்க்குமாறு தமிழக மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று இந்திய உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (06) வாய்மொழியாகக் குறிப்பிட்டது. கச்சத்தீவு தீவை இலங்கைக்கு வழங்கிய நடவடிக்கை அரசியலமைப்புக்கு முரணானது என்று சவால் விடுத்தமேலும் படிக்க...
2027 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றில்

2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீடுக்காக இன்று (07) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிதி விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்றமேலும் படிக்க...
ஷிரந்தி ராஜபக்ச – ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக் குழுவினரால் கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நுகேகொடையில் உள்ள வீட்டுக்கு ஆணைக்குழுவின் அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று காலை சென்றிருந்தனர்.இதன்போது, ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் படிக்க...
முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லகம கைது

ஊழல் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லகம, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். இக்குற்றச்சாட்டு தொடர்பான வாக்குமூலம் அளிப்பதற்காகப் போகொல்லகம இன்று (07) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தார்.மேலும் படிக்க...
அனோஜனிற்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தை

சவூதி அரேபியாவில், சிவராசா அனோஜனிற்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தையில் இலங்கையின் சட்டத்தரணிகள் குழு பங்கேற்றுள்ளது. இதற்கமைய ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும, ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா மற்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அசாத் நவாவிமேலும் படிக்க...
அனோஜனை காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் – அரசாங்கம் உறுதி

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை நாட்டவர் சிவராசா அனோஜனுக்கு உதவ இலங்கை அரசாங்கம் தனது சட்டரீதியான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது அங்குள்ள சட்டக் குழுவினர் அந்நாட்டின் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான மேமுறையீட்டு மனுவைத் தயாரித்து வருவதாக வெளிவிவகாரமேலும் படிக்க...
