Main Menu

மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து விபத்து – 2 பேர் பலி

பதுளை – துன்ஹிந்த பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர்.
சம்பவத்தில் 35 பேர் வரை காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்தே வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து இடம்பெற்ற போது, குறித்த பேருந்தில் 41 பேர் வரை பயணித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பகிரவும்...