மட்டக்களப்பு மாவட்டம் 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான முன் ஆயத்தங்கள் பூர்த்தி
இலங்கை சனநாயக குடியரசின் ஒன்பதாவது ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பானமட்டக்களப்பு மாவட்டத்திற்கான சகல முன்னாயத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமாகிய ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் நேற்று (17) மேற்பார்வை விஜயமொன்றை மேற்கொண்டார்.இதன்போது மாவட்டத்தின் வாக்கெண்ணும் நிலையமான மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் மண்டப ஒழுங்குகள், போக்குவரத்து, பொது வசதிகள், நலனோன்பு, மின்சாரம் போன்ற வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகிய விடயங்கள் ஆய்வு செய்யப்பட்டதுடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக உரிய திணைக்களங்களின் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது, இவ்விஜயத்தின் போது மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.பீ.எம்.சுபியான் உள்ளிட்டோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.