மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவேன் – பசில் உறுதி!
மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில், தனது எதிர்க்கால செயற்பாடுகள் அமைந்திருக்கும் என நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சில் இன்று (வியாழக்கிழமை) தனது கடமைகளைப் பெறுப்பேற்ற அவர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் எனக்கு பதவிகளை வழங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு நான் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நிதி அமைச்சில் நான் இன்று கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளேன். அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு இணங்க நான் என்றும் பயணிப்பேன்.
அந்தவகையில், இந்நாட்டு மக்களின் பிரதிநிதியாக நான் எனது எதிர்காலப் பயணத்தை முன்னெடுப்பேன்.
மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில், நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
இந்நாட்டில் உள்ள விவசாயிகள், மீனவர்கள், அரச உத்தியோகஸ்தர்கள், தொழிலாளர்களின் நெருங்கிய நன்பணே இன்று நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை உணர்ந்து, எமக்கான ஒத்துழைப்பினை அனைவரும் வழங்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.
பகிரவும்...