புதிய தலைவரை தேர்ந்தெடுத்த ஜப்பானின் ஆளும் கட்சி – அடுத்த பிரதமராகும் வாய்ப்பு

ஜப்பானின் ஆளும் கட்சி சனிக்கிழமை (04) முன்னாள் பொருளாதார பாதுகாப்பு அமைச்சர் சானே தகைச்சியை (Sanae Takaichi) அதன் புதிய தலைவராகத் தேர்ந்தெடுத்தது.
இதன் மூலம் அவர் நாட்டின் முதல் பெண் பிரதமராக வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன.
பாலின சமத்துவத்தில் சர்வதேச அளவில் மோசமான தரவரிசையில் உள்ள ஒரு நாட்டில், ஜப்பானின் நீண்டகாலமாக ஆளும் பழமைவாத லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் ((LDP) முதல் பெண் தலைவராக 64 வயதான தகைச்சி வரலாறு படைத்துள்ளார்.
ஆண் ஆதிக்கம் செலுத்தும் கட்சியின் மிகவும் பழமைவாத உறுப்பினர்களில் அவர் ஒருவர்.
சனிக்கிழமை நடைபெற்ற LDP கட்சி நடத்திய உட்கட்சி வாக்கெடுப்பில், பிரபல முன்னாள் பிரதமர் ஜூனிச்சிரோ கொய்சுமியின் மகனும் விவசாய அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமியை தகைச்சி தோற்கடித்தார்.
பெரும் தேர்தல் தோல்விகளுக்குப் பின்னர் பொதுமக்களின் ஆதரவை மீண்டும் பெற்று ஆட்சியில் நீடிக்க கட்சி நம்பிக்கையுடன் இருப்பதால், பிரதமர் ஷிகெரு இஷிபாவை தகைச்சி பதவி மாற்றம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானின் தேசியத் தலைவரை நிர்ணயிக்கும் கீழ்சபையில் கட்சி மிகப் பெரிய கட்சியாக இருப்பதாலும், எதிர்க்கட்சிகள் பெரிதும் பிளவுபட்டிருப்பதாலும் அவர் ஜப்பானின் அடுத்த பிரதமராக வாய்ப்புள்ளது.
ஊழல்கள் மற்றும் உள் மோதல்களால் உலுக்கிய கொந்தளிப்பான சில ஆண்டுகளுக்குப் பின்னர் போராடும் ஆளும் கட்சியை ஒன்றிணைப்பது உட்பட பல சவால்களை அவர் தற்சயம் எதிர்கொள்கிறார்.
மந்தமான பொருளாதாரம், இடைவிடாத பணவீக்கம் மற்றும் தேக்கமான ஊதியங்களால் போராடும் ஜப்பானிய குடும்பங்களையும் அவர் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
பகிரவும்...