Main Menu

பிறந்தது ஆங்கிலப் புத்தாண்டு 2025

2025 புத்தாண்டு பிறந்துள்ளது. பிறந்துள்ள 2025 புத்தாண்டு அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் நிறைந்ததாக ஆண்டாக அமைய வாழ்த்துகிறோம்.
புத்தாண்டை வரவேற்கும் முகமாக கொழும்பு உட்பட நாடளாவிய ரீதியில் பட்டாசுக்கள்  கொளுத்தி பல்வேறு கொண்டாட்டங்கள் இடம்பெற்றதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
கொழும்பு துறைமுக நகரில் கவர்ச்சிகரமான வாணவேடிக்கைகள் இடம்பெற்றதுடன், தாமரை கோபுர வளாகத்தில் வண்ண விளக்குகளுடன் வானவேடிக்கை நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
நாடளாவிய ரீதியாக உள்ள மதஸ்தலங்களில் விசேட வழிபாடுகளும் நேற்றிரவு இடம்பெற்றன.
இதேவேளை, பசுபிக் பிராந்தியத்திலுள்ள கிரிபாட்டி தீவு, இலங்கை நேரப்படி நேற்று பிற்பகல் 3.30க்கு முதலாவதாக 2025 புத்தாண்டை வரவேற்றது.
கிரிபாட்டி மக்கள் புத்தாண்டை வரவேற்கும் வகையில் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்திருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கிரிபாட்டி தீவுக்கு பிறகு உலகின் முதல் நாடாக நியூசிலாந்து 2025 புத்தாண்டை வரவேற்றது.
இலங்கை நேரப்படி நேற்று மாலை 4.30 க்கு அந்த நாட்டில் புத்தாண்டு பிறந்தது. அதனையடுத்து அவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் 2025 புத்தாண்டை வரவேற்றன.
பகிரவும்...
0Shares