Main Menu

பிராமணர்களுக்கு பாதுகாப்பில்லை என்று கஸ்தூரி பேசியது தப்பு – நடிகர் எஸ்.வி. சேகர்

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில், நடிகை கஸ்தூரிக்கு நடிகர் எஸ்.வி. சேகர் கண்டனம் தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, “300 வருடங்களுக்கு முன் ராஜாவுக்கு அந்தபுரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் எல்லாம், தெலுங்கு பேசுபவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழகர்கள் என… அப்படி சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு நீங்க யார்ங்க தமிழர்கள். அதனால்தான் உங்களால் தமிழர்கள் முன்னேற்ற கழகம் என வைக்க முடியவில்லை. திராவிடர் என்ற ஒரு சொல்லை கண்டுபிடித்து..” என்று தெரிவித்து இருந்தார்.

இந்த விவகாரம் பூதாகாரமாக வெடித்தது. மேலும், இவரது பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இது தொடர்பாக அவர் பெயரில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில், செய்தியாளர்களை இன்று சந்தித்த நடிகர் எஸ்.வி. சேகர் நடிகை கஸ்தூரி கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய அவர், “பொது வெளியில் நாம் பேசும் போது, என்ன பேசுகிறோம் என்பதை விட எந்த வார்த்தைகளை பேசக்கூடாது என்பதை தெரிந்து கொண்டு போக வேண்டும். மைக்கை பார்த்ததும், வியாதிக்காரன் வாந்தி எடுத்த மாதிரி எல்லாவற்றையும் பேசினால் தப்பு வரத்தான் செய்யும். கஸ்தூரி பேசியது மிகவும் கண்டிக்கத்தக்க செயல். அவர்கள் பேச வேண்டுமெனில், பிரமாணர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுவதே தப்பு,” என்று தெரிவித்தார்.

பகிரவும்...
0Shares